Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
வாலி

love

❝அந்த இருட்டுக்கும்
பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும்
கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்❞


புலமைப்பித்தன்

love

❝ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும்
காதல் மனம் பார்ப்பதுண்டோ
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலி வரை கேட்பதுண்டோ❞


வைரமுத்து

love

❝ வானம் என் விதானம் இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும் மாறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும் எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும் எந்தன் ராகம் சென்று ஆடும்
வாகை சூடும்❞


கங்கை அமரன்

love

❝அனைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்து பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திரை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய❞


RV உதயகுமார்

love

❝காத்தோடு மலராட கார் குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன்❞


னைவருக்கு வணக்கம்

love
இவ் இணையதளம் தமிழ் திரைப்படபாடல்களின் வரிகளின் மீது எனக்கிருக்கும் அளவில்லா பற்றுதலின் வெளிப்பாடு.

இத்தளம் பாடல் வரிகளின் அவை. பாடலாசிரியர்களை முன்னிலைப்படுத்தும் ஒரு சபை.

அன்று, வானில் ஒலித்ததை பள்ளி பயிற்சிப்புத்தகங்களின் கடைசி பக்கங்களில் எழுதிக்குவித்த அதே வரிகள் தான் இவை.

அறையும் குறையுமாக பாடும் பக்குவம் தான் இருந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேடை அமைத்துக்கொடுத்த அதே வரிகள் தான் இவை.

அன்று நனைத்த அடைமழை, அன்று கொஞ்சிய தென்றல் காற்று, அன்று சுட்டெரித்த உச்சி வெயில் எல்லாவையையுமே இன்றளவும் உணர வைக்கும் அதே வரிகள் தான் இவை.

அன்று கடித்த மூட்டைப்பூச்சி, அன்று கிள்ளிப்பார்த்த நுளம்புக்குஞ்சு, அம்மாவின் அரவணைப்பு, அப்பாவின் ஆளுமை, அண்ணாவின் அன்பு, அக்காவின் அனுசரணை எல்லாவற்றையும் மீண்டும் அருகே கொணரும் அதே வரிகள் தான் இவை.

தொலைத்துபோன அந்த வீட்டுத்திண்ணை, அந்த கிடுகுவேலி, அந்த பனைமரங்கள் தென்னைமரங்கள், அந்த இருவாலி கிணறு, அந்த பள்ளிமேசை, அந்த கிரீச்சிடும் முன் வாசல் படலை எல்லாவற்றுடனும் ஒட்டவைத்த அதே வரிகள் தான் இவை.

காதலை வளர்க்க துணை நின்ற வரிகள். அதே காதல் தடம் மாறி போனபோதெல்லாம் அமைதி காக்க உடன் நின்று காவல் காத்த அதே வரிகள் தான் இவை.

பாசமும் வீரமும் தோற்றுப்போய் பகை சேர்ந்த போதெல்லாம் அதை கவனம் கொண்டு கையாள கற்பித்த அதே வரிகள் தான் இவை.

வலிகளை சுமக்க வழி காட்டிய அதே வரிகள் தான் இவை.

சோர்வு போக்கும் சொற்களையும் சொற்றோடர்களையும் சொந்த பேச்சில் சேர்க்க சொல்லித்தந்த அதே வரிகள் தான் இவை.

அதே வரிகள் தான் இவை. இருப்பினும் ஆயிரம் ஆயிரமாய் இன்றும் ஏதேதோ சொல்லி கொடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன.

இந்த வரிகள் தந்த சுகங்களை இந்த மண்ணில் எவையும் இதுவரை தந்தது இல்லை.

சில மறையாதவை...
சில மறவாதவை...
சில மயக்கியவை...
சில மந்திரித்தவை...
சில மகிழ்வித்தவை...

இவ் இணையதளத்தில் நான் பதிவேற்றிருக்கும் பாடல் வரிகள் யாவும் நானாக கணனி துணை கொண்டு எழுதியவை. அவ்வகையில் எழுதிய பாடல் வரிகளை அப்பாடல்களுடன் பலதடவைகள் கேட்டு, சொற்களை மாத்திரம் சரிபார்த்தது அல்லாமல், பாடகர்கள் பாடிய முறையையும் கவனத்தில் கொண்டு எழுதியுள்ளேன். ஆகவே தொன்னூற்று ஒன்பது விகிதமாவது சொற்கள் சரியாக இருக்கும். சேர்ந்து பாடும் வகையில் அசலான பாடலுக்கு நிகராகவும் இருக்கும்.

இந்த இணையதளம் எந்த அடிப்படையிலும் யாருக்கும் போட்டியாக ஆரம்பிக்கப்பட்ட இணையதளம் அல்ல. ஆயிரக்கணக்கில் பாடல்களை சரி பிழை பார்க்காமல் பதிவேற்றம் செய்வதில் எனக்கு அவசரமும் இல்லை அவசியமும் இல்லை. அழகழகாக எழுதப்பட்ட பாடல்களை அப்பப்போ நான் இவ் இணையதளத்தில் சேர்த்துகொள்வேன்.

நீங்களும் நீங்கள் விரும்பும் பாடல்களை இவ் இணையதளத்தில் சேர்த்துக்கொள்ள விரும்பின் எனக்கு தெரியப்படுத்துங்கள். முடிந்தவரை சேர்த்துக்கொள்கின்றேன். அல்லது உங்களிடம் அப்பாடலுக்கான வரிகள் கைவசம் இருப்பின் எனக்கு மின் அஞ்சல் மூலம் அனுப்பிவையுங்கள். பாடலை சரி பிழை பார்த்து பின் சேர்த்துக்கொள்கின்றேன்.

அதே வேளை, ஏலவே பதிவேற்றிய பாடல் வரிகளில் தவறு காணீரெனில் தயவு கூர்ந்து தெரியப்படுத்தவும், நான் அதை திருத்திக்கொள்ள.

இத்தருணம் அருநூறு பாடல்களை இங்கு விதைத்திருக்கின்றேன். மேலும் வளரும், வளம் தரும் என்றும் வாடாமல்.

நன்றி
உதயன்
udhayan@subhashini.org
9th May 2020
ஜெயகாந்தன்

love

❝தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டை துணையை தேடுது

நீல-மேகம் ஏழு-வண்ண ஆடையோடுலாவுது
வானை பூமி அழைக்குது
தொடுவானில் இரண்டும் கலக்குது❞


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

love

❝துன்ப கடலை தாண்டும் போது
தோணி ஆவது கீதம்
அன்பு குரலில் அமுதம் கலந்தே
அருந்த தருவது கீதம்
எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவது கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம்
துயர் இருளை மறைப்பதும் கீதம்❞


A மருதகாசி

love

❝இதய வானிலே இன்பக் கனவுகோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா
வாசப் பூவும் தேனும் போல வாழத்தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா❞


Na முத்துக்குமார்

love

❝அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கத பேசி பேசி விடியுது இரவு
ஏழு கடல் தாண்டி தான் ஏழு மல தாண்டி தான்
என் கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு❞