Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me
மகாகவி சுப்ரமணிய பாரதியார்

love

❝காலம் என்றே ஒரு நினைவும்
காட்சி என்றே பல நினைவும்
கோலமும் பொய்களோ
அந்த குணங்களும் பொய்களோ
காண்பதெல்லாம் மறையும் என்றால்
மறைவதெல்லாம் காண்பதுண்டோ
நானும் ஓர் கனவோ
இந்த ஞாலமும் பொய் தானோ❞


மாயவநாதன்

love

❝கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ
இந்த பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ
உன்னை மட்டும் அருகினில் வைத்து
தினம் தினம் சுற்றி வருபவரோ
நீ கற்றுக்கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் அறிந்தவரோ
காதல் மட்டும் தெரிந்தவரோ❞


பஞ்சு அருணாசலம்

love

❝இளமை சதிராடும் தோட்டம்
காயும் கனியானதே
இனிமை சுவை காணும் உள்ளம்
தனிமை உறவாடுதே
ஜாடை சொன்னது என் கண்களே
வாடை கொண்டது என் நெஞ்சமே
குயிலே அவரை வரச்சொல்லடி
இது மோகனம் பாடிடும் பெண்மை
அதைச்சொல்லடி❞


புலமைப்பித்தன்

love

❝ஆலிலையின் ஓரத்திலே
மேகலையின் நாதத்திலே
இரவென்றும் பகலென்றும்
காதல் மனம் பார்ப்பதுண்டோ
கள்ள விழி மோகத்திலே
துள்ளி வந்த வேகத்திலே
இதழ் சிந்தும் கவி வண்ணம்
காலி வரை கேட்பதுண்டோ❞


ஜெயகாந்தன்

love

❝தென்னங்கீற்று ஊஞ்சலிலே
தென்றலில் நீந்திடும் சோலையிலே
சிட்டுக்குருவி ஆடுது தன்
பெட்டை துணையை தேடுது

நீல-மேகம் ஏழு-வண்ண ஆடையோடுலாவுது
வானை பூமி அழைக்குது
தொடுவானில் இரண்டும் கலக்குது❞


A மருதகாசி

love

❝இதய வானிலே இன்பக் கனவுகோடியே
உதயமாகியே ஊஞ்சல் ஆடும் போதிலே
வானம்பாடி ஜோடி கானம் பாட மயங்குமா
வாசப் பூவும் தேனும் போல வாழத்தயங்குமா
அன்பை நினைந்தே ஆடும்
அமுத நிலையை நாடும்
கண்கள் உறங்கிடுமா
காதல் கண்கள் உறங்கிடுமா❞


வைரமுத்து

love

❝ வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
மாறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு
ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகம் ஏழும்
எந்தன் ராகம் சென்று ஆடும்
வாகை சூடும்❞


T ராஜேந்தர்

love

❝வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
வின் மீனை பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்❞


தாமரை

love

❝கடல் நீளம் மங்கும் நேரும்
அலை வந்து தீண்டும் தோறும்
மனம் சென்று மூழ்காதோ ஈரத்திலே
தலை சாய்க்க தோலும் தந்தாய்
விரல் கொட்டும் பக்கம் வந்தாய்
இதழ் மட்டும் இன்னும் ஏன் தூரத்திலே
பகல் நேரம் கனாக்கள் கண்டேன் உறங்காமலே
உயிரெண்டு முறைய கண்டேன் நெருங்காமலே
உனை இன்றி எனக்கே ஏது எதிர்காலமே❞


Movies Songs Lyricists Composers Singers
375 1300 84 66 179


கண்ணதாசன்

love

❝தேனோடும் பூ முகத்து
செவ்வாயில் பால் வழிய
தெளிந்த காதல்
வண்டாடும் கள்ளவிழி
மண் பார்க்க முகம்-பார்க்க
மலர்ந்த காதல்
பள்ளியிலும் கொள்ளாமல்
பாலும் சுவைக்காமல்
வெள்ளை மனம் தாளாமல்
விழியிரண்டும் மூடாமல்
பட்ட துயர் மெத்தவென்று
பருவமுகம் காட்டுதம்மா
கட்டழகு ஏங்குதம்மா
வட்ட முகம் வாடுதம்மா❞


வாலி

love

❝அந்த இருட்டுக்கும்
பார்க்கின்ற விழி இருக்கும்
எந்த சுவருக்கும்
கேட்கின்ற காதிருக்கும்
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்❞


TN ராமையா தாஸ்

love

❝பாலூட்டும் நிலவு தேனூட்டுமே
பாடும் தென்றல் தாலாட்டுமே
முல்லை மலர்கள் அன்பினாலே
போடும் போர்வை தன்னாலே❞


முத்துலிங்கம்

love

❝வண்ணரதம் போலவே
தென்றல் நடை காட்டவா
புள்ளி மான் போலவே
துள்ளி நான் ஓடவா
வண்ண ரதமாகினால்
அதில் சிலை நானன்றோ
புள்ளி மான் தேடும்
கலைமானும் நான் அல்லவோ
அசைந்து தவழ்ந்து அருகில் நெருங்கு
அமுதாகவே❞


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

love

❝துன்ப கடலை தாண்டும் போது
தோணி ஆவது கீதம்
அன்பு குரலில் அமுதம் கலந்தே
அருந்த தருவது கீதம்
எங்கும் சிதறும் எண்ணங்களையும்
இழுத்து வருவது கீதம்
இணைத்து மகிழ்வதும் கீதம்
துயர் இருளை மறைப்பதும் கீதம்❞


கங்கை அமரன்

love

❝அனைத்து நனைந்தது தலையணைதான்
அடுத்த அடியென்ன எடுப்பது நான்
படுக்கை விரித்தது உனக்கெனத்தான்
இடுப்பை வளைத்தெனை அணைத்திடத்தான்
நினைக்க மறந்தாய் தனித்து பறந்தேன்
மறைத்த முகத்திரை திறப்பாயோ
திறந்து அகத்திரை இருப்பாயோ
இருந்து விருந்து இரண்டு மனம் இணைய❞


Na முத்துக்குமார்

love

❝அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்புக்கத பேசி பேசி விடியுது இரவு
ஏழு கடல் தாண்டி தான் ஏழு மல தாண்டி தான்
என் கருத்து மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு❞


RV உதயகுமார்

love

❝காத்தோடு மலராட கார் குழலாட
காதோரம் லோலாக்கு சங்கதி பாட
மஞ்சளோ தேகம் கொஞ்சவரும் மேகம்
அஞ்சுகம் தூங்க கொண்டுவரும் ராகம்
நிலவ வான் நிலவ நான் புடிச்சு வாரேன்
குயிலே பூங்குயிலே பாட்டெடுத்துத் தாரேன்❞


பா விஜய்

love

❝உள்ளம் என்றும் எப்போதும்
உடைந்து போக கூடாது
என்ன இந்த வாழ்க்கை என்ற
எண்ணம் தோன்ற கூடாது
எந்த மனித நெஞ்சுக்குள்
காயம் இல்லை சொல்லுங்கள்
காலபோக்கில் காயமெல்லாம்
மறைந்து போகும் மாயங்கள்
உளி தாங்கும் கற்கள் தானே
மண்மீது சிலையாகும்
வலி தாங்கும் உள்ளம் தானே
நிலையான சுகம் காணும்
யாருக்கில்லை போராட்டம்
கண்ணில் என்ன நீரோட்டம்
ஒரு கனவு கண்டால்
அதை தினமுயன்றால்
ஒரு நாளில் நிஜமாகும்❞


Home     Movies     Songs     Lyricists     Composers     Singers     Genre     About     Email Me