Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Noolveli
[1979]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Mounaththil Vilayaadum Bala MuralikrishnaKannadasan
Naana Paaduvathu SP Balasubrahmanyam/Vani Jairam/LR AnjaliKannadasan
Therottam Aanantha SP BalasubrahmanyamKannadasan
Veenai Sirippu Aasai Alaippu SP Balasubrahmanyam/Vani JairamKannadasan
Veenai Sirippu Aasai Alaippu

Lyricist
Kannadasan
Sung by
SP Balasubrahmanyam/Vani Jairam



[ஆண்]
வீணை சிரிப்பு ஆசை அழைப்பு
வேதம்-பாடட்டுமா
மாலை மயக்கம் என்னை மயக்கும்
மஞ்சம்-நாளாகுமா
வீணை சிரிப்பு ஆசை அழைப்பு
வேதம்-பாடட்டுமா
மாலை மயக்கம் என்னை மயக்கும்
மஞ்சம்-நாளாகுமா

___ ♫♫♫ ___

[ஆண்]
பூசிய-சந்தனம் மார்பினில்-சாய்ந்ததும் கன்னம்-தடமாகுமா
பூசிய-சந்தனம் மார்பினில்-சாய்ந்ததும் கன்னம்-தடமாகுமா
பொங்கிய-குங்குமம் செங்கனி-வாய்-இதழ் எங்கும்-விளையாடுமா
பொங்கிய-குங்குமம் செங்கனி-வாய்-இதழ் எங்கும்-விளையாடுமா

[பெண்]
விழி-ஓரங்கள்-கதை-பேசுமோ
தேன்-அமுதெனும்-மழை-வர-நாதங்கள்-உருவாகுமோ

[ஆண்]
அழகிய-திருமுகமதில்-நாணங்கள்-விளையாடுமோ
இடை-எனும்-சிறு-கொடிதனில்-வானங்கள்-கவிபாடுமோ...

[பெண்]
வீணை சிரிப்பு ஆசை அழைப்பு
வேதம்-பாடட்டுமா
மாலை மயக்கம் என்னை மயக்கும்
மஞ்சம்-நாளாகுமா

___ ♫♫♫ ___

[பெண்]
மன்மத-மந்திரம் மாலையில்-கேட்டதும் எண்ணம்-அலையாகுமோ
மங்கள-நாடகம் பள்ளியில்-வந்ததும் பெண்மை-விலையாகுமோ
மங்கள-நாடகம் பள்ளியில்-வந்ததும் பெண்மை-விலையாகுமோ

[ஆண்]
ரதி-நேர்-வந்து-மலர்-தூவுமே
ஓர்-ரகசிய-கவிதையில்-ஆனந்தம்-கலை-ஆகுமோ

[பெண்]
இலையோடு-மலரென-தினம்-உள்ளங்கள்-உறவாடுமோ
இருவரும்-ஒரு-நிலை-பெற-தெய்வங்கள்-துணையாகுமோ

[ஆண்]
வீணை சிரிப்பு ஆசை அழைப்பு
வேதம்-பாடட்டுமா

[பெண்]
மாலை மயக்கம் என்னை மயக்கும்
மஞ்சம்-நாளாகுமா