Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Moondru Mudichchu
[1976]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Aadi Velli Thedi Unnai Jeyachandran/Vani JairamKannadasan
Nanoru Kathanayaki P Susheela/LR EswariKannadasan
Vasantha Kaala Nathikalile Jeyachandran/MS Viswanathan/Vani JairamKannadasan
Aadi Velli Thedi Unnai

Lyricist
Kannadasan
Sung by
Jeyachandran/Vani Jairam



[ஆண்]
ஆடி-வெள்ளி தேடி-உன்னை நானடைந்த-நேரம்
கோடி-இன்பம் நாடி-வந்தேன் காவிரியின்-ஓரம்
காவிரியின்-ஓரம்
ஆடி-வெள்ளி தேடி-உன்னை நானடைந்த-நேரம்
கோடி-இன்பம் நாடி-வந்தேன் காவிரியின்-ஓரம்

[பெண்]
ஓரக்-கண்ணில் ஊறவைத்த தேன்-கவிதைச்-சாரம்
ஓரக்-கண்ணில் ஊறவைத்த-தேன்-கவிதைச்-சாரம்
ஓசையின்றி பேசுவது ஆசை-என்னும்-வேதம்
ஆசை-என்னும்-வேதம்

[குழு]
ஆ...ஆசை-என்னும்-வேதம்

[ஆண்]
வேதம்-சொல்லி மேளமிட்டு மேடை-கண்டு-ஆடும்
மெத்தை-கொண்டு தத்தை-ஒன்று வித்தை-பல-நாடும்
வேதம்-சொல்லி மேளமிட்டு மேடை-கண்டு-ஆடும்
மெத்தை-கொண்டு தத்தை-ஒன்று வித்தை-பல-நாடும்

[பெண்]
நாடும்-உள்ளம் கூடும்-எண்ணம் பேசும்-மொழி-மெளனம்
ராகம்-தன்னை மூடி-வைத்த வீணை-அவள்-சின்னம்
வீணை-அவள்-சின்னம்

[குழு]
தம்-தனம்
தனம்-தனம்-தனம்-தனம்-தனம்-தனம்-தனம்-தனம்
தனம்-தனம்-தனம்-தனம்-தனம்-தனம்-தனம்-தனம்
ஆ...வீணை-அவள்-சின்னம்

[ஆண்]
சின்னம்-மிக்க அன்னக்கிளி வண்ணச்-சிலைக்-கோலம்
என்னை-அவள் பின்னிக்-கொள்ள என்று-வரும்-காலம்

[பெண்]
காலம்-இது காலம்-என்று காதல்-தெய்வம்-பாடும்
கங்கை-நதி பொங்கும்-கடல் சங்கமத்தில்-கூடும்
சங்கமத்தில்-கூடும்

[ஆண்]
ஆடி-வெள்ளி தேடி-உன்னை நானடைந்த-நேரம்
கோடி-இன்பம் நாடி-வந்தேன் காவிரியின்-ஓரம்
காவிரியின்-ஓரம்