Tamil Song Lyrics
 தமிழ் பாடல் வரிகள்
Movies     Songs     Lyricists     Composers     Singers     About
Ramu
[1966]

Composed by
MS Viswanathan


Song TitleSingersLyricist
Kannan Vanthaan Ange TM Soundararajan/Seerkazhi GovindarajanKannadasan
Muthuchippi Mella Mella P SusheelaKannadasan
Nilave Ennidam Nerungaathe PB Sreenivas/P SusheelaKannadasan
Pachai Maram Ondru P SusheelaKannadasan
Pachai Maram Ondru (Pathos) PB Sreenivas/P SusheelaKannadasan
Nilave Ennidam Nerungaathe

Lyricist
Kannadasan
Sung by
PB Sreenivas/P Susheela



[பெண்]
நித்திரையில்-வந்து நெஞ்சில்-இடம்-கொண்ட
உத்தமன்-யாரோடி
நித்திரையில்-வந்து நெஞ்சில்-இடம்-கொண்ட
உத்தமன்-யாரோடி
தோழி
நித்திரையில்-வந்து நெஞ்சில்-இடம்-கொண்ட
உத்தமன்-யாரோடி

___ ♫♫♫ ___

[ஆண்]
நிலவே-என்னிடம் நெருங்காதே
நீ-நினைக்கும்-இடத்தில் நான்-இல்லை
நிலவே-என்னிடம் நெருங்காதே
நீ-நினைக்கும்-இடத்தில்-நான்-இல்லை
மலரே-என்னிடம் மயங்காதே-நீ
மயங்கும்-வகையில்-நான்-இல்லை
நிலவே-என்னிடம் நெருங்கா..தே
நீ-நினைக்கும்-இடத்தில்-நா...ன்-இல்லை

___ ♫♫♫ ___

கோடையில்-ஒரு-நாள்-மழை-வரலாம்
என்-கோலத்தில் இனிமே..ல்-எழில்-வருமோ
கோடையில்-ஒரு-நாள்-மழை-வரலாம்
என்-கோலத்தில் இனிமேல்-எழில்-வருமோ
பாலையில்-ஒரு-நாள் கொடி-வரலாம்
என்-பார்வையில்-இனிமேல் சுகம்-வருமோ
நிலவே-என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும்-இடத்தில்-நான்-இல்லை

___ ♫♫♫ ___

ஊமையின்-கனவை யார்-அறிவார்
ஊமையின்-கனவை யார்-அறிவார்
என்-உள்ளத்தின் கதவை யார்-திறப்பார்
மூடிய-மேகம் கலையுமுன்னே
நீ-பாட-வந்தாயோ-வெண்ணிலவே
நிலவே-என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும்-இடத்தில்-நான்-இல்லை

___ ♫♫♫ ___

அமைதி-இல்லாத-நேரத்திலே
அமைதி-இல்லாத-நேரத்திலே
அந்த-ஆண்டவன் என்னையே-படைத்துவிட்டான்
நிம்மதி-இழந்தே நான்-அலைந்தேன்
இந்த-நிலையில்-உன்னை ஏன் தூது-விட்டான்
நிலவே-என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும்-இடத்தில்-நான்-இல்லை
மலரே-என்னிடம் மயங்காதே-நீ
மயங்கும்-வகையில்-நான்-இல்லை
நிலவே-என்னிடம் நெருங்காதே
நீ நினைக்கும் இடத்தில் நான்-இல்லை