In English
Anton Povlovich Tcheckov
Subhashini.org
    
The Lottery Ticket
Anton Povlovich Tcheckov
லொட்டரி சீட்டு
அன்டன் பவ்லோவிச் செக்கோவ்
ഭാഗ്യക്കുറി ടിക്കറ്റ്
ആന്റൺ പവ്‌ലോവിച്ച് ചെക്കോവ്
First recorded in Russian: March 1887
English translation: 1912
Translated by Constance Clara Garnett
ரஷிய மொழியில் முதல் பதிவு: மார்ச் 1887
ஆங்கிலத்தில் மொழிமாற்றம்: 1912
தமிழாக்கம்: 2022, ஷான் உதே
റഷ്യൻ ഭാഷയിൽ ആദ്യമായി രേഖപ്പെടുത്തിയത്: മാർച്ച് 1887
ഇംഗ്ലീഷ് വിവർത്തനം: 1912
മലയാളം വിവർത്തനം: 2025, ഷാൻ ഉതേ
പുതുക്കിയത്: വിനായക് (Kochi, Kerala)
  Ivan Dmitritch, a middle-class man who lived with his family for an income of twelve hundred roubles a year and was very satisfied with his lot, sat on the sofa after supper and began reading the newspaper.
  வான் டிமிட்ரிச், ஆண்டுக்கு ஆயிரத்து இருநூறு ரூபிள்ஸ் வருமானத்தில் குடும்பத்துடன் மிகவும் திருப்தியாக வாழ்ந்து வந்த ஒரு நடுத்தர வர்க்க மனிதர். அன்றைய இரவு உணவுக்குப்பிறகு சோபாவில் அமர்ந்து செய்தித்தாள் ஒன்றை படிக்கத்தொடங்கினார்.
  വാൻ ദിമിട്രിച്ച്, ഒരു മധ്യവർഗക്കാരന്, വർഷത്തിൽ ആയിരത്തി ഇരുനൂറ് റൂബിൾസ് വരുമാനത്തിൽ കുടുംബത്തോടൊപ്പം സംതൃപ്തനായി ജീവിച്ചു. അന്ന് അത്താഴം കഴിഞ്ഞ് അയാൾ സോഫയിൽ ഇരുന്നു പത്രം വായിക്കാൻ തുടങ്ങി.
1
“I forgot to look at the newspaper today, Look and see whether the list of drawings is there,” his wife, Masha, said as she cleared the table.
மேசையை சுத்தம் செய்தபடி, “இன்று செய்தித்தாளைப்பார்க்க மறந்துவிட்டேன். வெற்றி இலக்கங்களின் பட்டியல் இருக்கிறதா என்று பாருங்கள்,” என்று அவரது மனைவி மாஷா சொன்னார்.
മേശ വൃത്തിയാക്കുന്നതിനിടയിൽ, “ഇന്നത്തെ പത്രം നോക്കാൻ ഞാൻ മറന്നു. വിജയിച്ച നമ്പറുകളുടെ പട്ടിക ഉണ്ടോ എന്ന് നോക്കൂ,” അയാളുടെ ഭാര്യ മാഷാ പറഞ്ഞു.
2
“Yes, it is, but hasn’t your ticket lapsed?” asked Ivan.
“ஆம், இருக்கிறது. ஆனால் உங்கள் டிக்கெட் காலாவதியாகவில்லையா?” கேட்டார் இவான்.
“അതെ, ഉണ്ട്. പക്ഷേ, നിങ്ങളുടെ ടിക്കറ്റിന്റെ കാലാവധി കഴിഞ്ഞതല്ലേ?” ഇവാൻ ചോദിച്ചു.
3
“No. I bought a new one on Tuesday,” said Masha.
“இல்லை. செவ்வாய்க்கிழமை புதிதாய் ஒன்று வாங்கினேன்,” சொன்னார் மாஷா.
“ഇല്ല. ഞാൻ ചൊവ്വാഴ്ച പുതിയൊരു ടിക്കറ്റ് വാങ്ങി,” മാഷാ പറഞ്ഞു.
4
“What are the numbers?” asked Ivan.
“இலக்கங்கள் என்ன?” கேட்டார் இவான்.
“അക്കങ്ങൾ എന്തൊക്കെയാണ്?” ഇവാൻ ചോദിച്ചു.
5
“Series 9499...number 26,” said Masha.
“தொடர் 9499...இலக்கம் 26,” சொன்னார் மாஷா.
“പരമ്പര 9499...നമ്പർ 26,” മാഷാ പറഞ്ഞു.
6
“All right...We will look...9499...26,” said Ivan.
“எல்லாம் சரி...பார்ப்போம்...9499...26,” சொன்னார் இவான்.
“എല്ലാം ശരിയാണ്... നോക്കാം...9499...6ഉം,” ഇവാൻ പറഞ്ഞു.
7
Ivan had no faith in lottery luck and would not, as a rule, have consented to look at the lists of winning numbers. Still, as he had nothing else to do and as the newspaper was before his eyes, he passed his finger downwards along the column of numbers. And immediately, as though in mockery of his scepticism, no further than the second line from the top, his eye was caught by the figure 9499!
இவான் டிமிட்ரிச்சிற்கு லாட்டரி அதிர்ஷ்டத்தில் நம்பிக்கை இல்லை. அவர், ஒரு கொள்கையாக, வெற்றி எண்களின் பட்டியலைப்பார்க்க சம்மதித்திருக்க மாட்டார். ஆனால், இப்போது, வேறு எதுவும் செய்யாததாலும், செய்தித்தாள் கண்ணுக்கு கிட்டிய தூரத்தில் இருந்ததாலும், எண்களின் பட்டியலில் தனது விரலை கீழ்நோக்கி கொண்டு சென்றபடி தனது இலக்கங்களை தேடினார். உடனே, அவரது சந்தேகத்தை கிண்டல் செய்வது போல், மேலே இருந்து இரண்டாவது வரியைத்தாண்டும் முன்பே, அவரது கண்ணில் 9499 இலக்கம் சிக்கியது.
ഇവാൻ ദിമിട്രിച്ചിന് ലോട്ടറി ഭാഗ്യത്തിൽ വിശ്വാസമില്ലായിരുന്നു, ചട്ടം പോലെ, വിജയ നമ്പറുകളുടെ പട്ടിക നോക്കാൻ അദ്ദേഹം സമ്മതിച്ചതുമില്ല. എന്നിട്ടും, മറ്റൊന്നും ചെയ്യാനില്ലാത്തതിനാലും, പത്രം കൺമുന്നിൽ ഉണ്ടായിരുന്നതിനാലും, അയാൾ അക്കങ്ങളുടെ നിരയിലൂടെ വിരൽ താഴേക്ക് കടത്തി. ഉടനെ, തന്റെ സംശയത്തെ പരിഹസിച്ചുകൊണ്ടെന്നപോലെ, മുകളിൽ നിന്നുള്ള രണ്ടാമത്തെ വരിക്കപ്പുറം, 9499 എന്ന അക്കം അയാളുടെ ശ്രദ്ധയിൽപ്പെട്ടു!
8
Unable to believe his eyes, he hurriedly dropped the paper on his knees without looking to see the number of the ticket, and, just as though someone had given him a douche of cold water, he felt an agreeable chill in the pit of the stomach; tingling and terrible and sweet!
தன் கண்களையே நம்ப முடியாத அவர், லோட்டரி சீட்டின் எண்ணை முழுமையாக பார்க்காமல், அவசர அவசரமாக தன் மடியிலேயே பத்திரிகையை போட்டார். யாரோ அவருக்கு குளிர்ந்த தண்ணீரைக்கொடுத்தது போல, அவர் அடிவயிற்றில் ஒரு இனிமையான குளிர்மையையும் அதிகளவினிலான கூச்சத்தையும் உணர்ந்தார்.
തന്റെ കണ്ണുകളെ വിശ്വസിക്കാൻ കഴിയാതെ, ലോട്ടറി ടിക്കറ്റ് നമ്പർ മുഴുവനായി നോക്കാതെ അയാൾ തിടുക്കത്തിൽ പത്രം മടിയിൽ വച്ചു. ആരോ തണുത്ത വെള്ളം തളിച്ച പോലെ, അടിവയറ്റിൽ സുഖകരമായ ഒരു തണുപ്പും വലിയൊരു ഇക്കിളിയും അയാൾക്ക് അനുഭവപ്പെട്ടു.
9
“Masha, 9499 is here!” he said in a hollow voice.
“மாஷா, 9499 இருக்கின்றது!”, என்றார் ஒரு வெறுமையான குரலில்.
“മാഷാ, 9499 ഉണ്ട്!” അയാൾ പൊള്ളയായ ശബ്ദത്തിൽ പറഞ്ഞു.
10
Masha looked at his husband’s astonished and panic-stricken face and realised that he was not joking.
மாஷா ஆச்சரியத்துடனும் பீதியுடனும் இருந்த அவரது கணவனின் முகத்தைப்பார்த்து, அவர் கிண்டல் செய்யவில்லை என்பதை உணர்ந்தார்.
അത്ഭുതവും പരിഭ്രാന്തിയും നിറഞ്ഞുനിന്ന ഭർത്താവിന്റെ മുഖത്തേക്ക് നോക്കിയ മാഷ, അയാൾ തമാശ പറയുകയല്ലെന്ന് മനസ്സിലാക്കി.
11
“9499?” Masha asked, turning pale and dropping the folded tablecloth.
மாஷாவின் முகம் வெளிர் நிறமாக மாறிவிட்டது. மடிந்திருந்த மேசை துணியை மேசையில் வைத்துவிட்டு கேட்டார், “9499?”
മാഷയുടെ മുഖം വിളറി. മടക്കിവെച്ച മേശവിരി മേശപ്പുറത്ത് വച്ചിട്ട് ചോദിച്ചു, “9499?”
12
“Yes, yes. it is really here!” said Ivan.
“ஆம், ஆம்...அது உண்மையாகவே இருக்கிறது!.” சொன்னார் இவான்.
“അതെ, അതെ...അത് സത്യമാണ്!” ഇവാൻ പറഞ്ഞു.
13
“And the number of the ticket?” asked Masha.
“சீட்டின் எண்?” மாஷா கேட்டார்.
“ടിക്കറ്റ് നമ്പർ?” മാഷാ ചോദിച്ചു.
14
“Oh yes! There’s the number of the ticket too. But stay! Wait! No! I say! Anyway, the number of our series is there! you understand?”
“ஓ, ஆமாம்! சீட்டின் எண்ணும் உள்ளது. ஆனால், இரு! கொஞ்சம் பொறு! இல்லை! நான் சொல்கிறேன்! ஆனால், எங்கள் தொடரின் இலக்கம் இருக்கின்றது! உனக்கு புரிகின்றதா?”
“ഓ, അതെ! സീറ്റ് നമ്പറും ഉണ്ട്. പക്ഷേ, കാത്തിരിക്കൂ! കുറച്ച് കാത്തിരിക്കൂ! ഇല്ല! ഞാൻ പറയുന്നു! പക്ഷേ, നമ്മുടെ പരമ്പരയ്ക്ക് ഒരു നമ്പർ ഉണ്ട്! എങ്ങനെയോ! നിനക്ക് മനസ്സിലാകുന്നുണ്ടോ?”.
15
Looking at Masha, Ivan gave a broad, senseless smile, like a baby when a bright object is shown. Masha smiled, too. It was as pleasant to her as to him that he only mentioned the series and did not try to find out the number of the winning ticket. Tormenting and tantalising oneself with hopes of possible fortune is so sweet and thrilling.
மாஷாவை பார்த்து, இவான் ஒரு விளையாட்டுப்பொருளைக்காட்டும்போது ஒரு குழந்தை எப்படி பிரகாசமாக சிரிக்குமோ அதைப்போல ஒரு அர்த்தமற்ற புன்னகையை வழங்கினார். மாஷாவும் புன்னகைத்தார். அவர் தொடரை மட்டுமே கண்டது மாஷாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது, வெற்றிக்கான சீட்டின் எண்ணைக்கண்டுபிடிக்க முயற்சிக்கவில்லை. அதிர்ஷ்டம் கிடைத்துவிட்டதென நம்பிக்கையுடன் தன்னைத்தானே வேதனைப்படுத்துவதும் சித்திரவதைப்படுத்துவதும் மிகவும் இனிமையானது, மிகவும் சிலிர்ப்பானது!
മാഷയെ നോക്കി, ഇവാൻ അവൾക്ക് അർത്ഥശൂന്യമായ ഒരു പുഞ്ചിരി നൽകി, ഒരു കളിപ്പാട്ടം കാണിച്ചപ്പോൾ ഒരു കുട്ടിയുടെ തിളക്കമുള്ള പുഞ്ചിരി പോലെ. മാഷയും പുഞ്ചിരിച്ചു. പരമ്പര മാത്രം കണ്ടതിൽ മാഷ സന്തോഷിച്ചു, സമ്മാനം ലഭിച്ച ടിക്കറ്റിന്റെ നമ്പർ കണ്ടെത്താൻ ശ്രമിച്ചില്ല. ഭാഗ്യം കണ്ടെത്തിയെന്ന് വിശ്വസിച്ച് സ്വയം പീഡിപ്പിക്കുകയും പ്രലോഭിപ്പിക്കുകയും ചെയ്യുന്നതിൽ എത്ര മധുരമാണ്, എത്ര ആവേശകരമാണ്!
16
“It is our series,” said Ivan after a long silence.
நீண்ட அமைதிக்குப்பிறகு, “இது எங்கள் தொடர்”, என்று இவான் கூறினார்.
ഒരു നീണ്ട നിശബ്ദതയ്ക്ക് ശേഷം, “ഇത് ഞങ്ങളുടെ പരമ്പരയാണ്,” ഇവാൻ പറഞ്ഞു.
17
“So there is a probability that we have won. It’s only a probability, but there it is!”
“எனவே நாங்கள் வெற்றி பெற்றதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளது. இருப்பினும், இது ஒரு நிகழ்தகவு மட்டுமே, ஆனால் வெல்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.”
“അപ്പോൾ നമ്മൾ ജയിക്കാനുള്ള സാധ്യത വളരെ കൂടുതലാണ്. എന്നിരുന്നാലും, ഇത് ഒരു സാധ്യത മാത്രമാണ്, പക്ഷേ ജയിക്കാനുള്ള സാധ്യതയുമുണ്ട്.”
18
“Well, now look!” said Ivan.
“சரி, இப்போது பார்ப்போம்!” சொன்னார் இவான்.
“ശരി, ഇപ്പോൾ നോക്കാം!” ഇവാൻ പറഞ്ഞു.
19
“Wait a little. We have plenty of time to get disappointed. It’s on the second line from the top, so the prize is seventy-five thousand. That’s not a money but power and capital! And I shall look at the list in a minute, and there is 26. Eh? I say, what if we really have won?” Ivan said further.
“சற்று நேரம் பொறுங்கள். நாம் ஏமாற்றமடையக்கூடிய தருணங்கள் நிறைய இருக்கிறது. இது மேலே இருந்து இரண்டாவது வரியில் உள்ளது, எனவே பரிசு எழுபத்தைந்தாயிரம் ரூபிள்கள். அது பணம் அல்ல, அதிகாரம், மூலதனம்! ஒரு நிமிடத்தில் நான் பட்டியலைப்பார்ப்பேன், அங்கே 26 இருக்கும். என்ன? நான் சொல்கிறேன், நாம் உண்மையில் வெற்றி பெற்றால் என்ன செய்வது?” இவான் மேலும் சொன்னார்.
“ദയവായി ഒരു നിമിഷം കാത്തിരിക്കൂ. നമുക്ക് നിരാശ തോന്നുന്ന നിരവധി നിമിഷങ്ങളുണ്ട്. മുകളിൽ നിന്ന് രണ്ടാമത്തെ വരിയിലാണ് ഇത്, അതിനാൽ സമ്മാനം എഴുപത്തയ്യായിരം റുബിളാണ്. പണമല്ല, അധികാരമാണ്, മൂലധനമാണ്! ഒരു മിനിറ്റിനുള്ളിൽ ഞാൻ ലിസ്റ്റ് നോക്കാം, അപ്പോൾ 26 ഉണ്ടാകും. എന്ത്? ഞാൻ ഉദ്ദേശിക്കുന്നത്, നമ്മൾ യഥാർത്ഥത്തിൽ വിജയിച്ചാലോ?” ഇവാൻ കൂടുതൽ പറഞ്ഞു.
20
The husband and wife began laughing and staring at one another in silence. The possibility of winning bewildered them; they could not have said, could not have dreamed, what they both needed that seventy-five thousand for, what they would buy, or where they would go. They thought only of the figures 9499 and 75,000 and pictured them in their imagination, while somehow, they could not think of the happiness itself, which was so possible.
கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து மௌனமாக புன்னகைப்பூத்தார்கள். தாங்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நினைப்புகள் அவர்களை திகைப்பில் ஆழ்த்தியது. அவர்கள் இருவருக்குமே அந்த எழுபத்தைந்தாயிரம் ரூபிள்களால் என்ன பலன். எதைத்தான் வாங்குவார்கள். எங்குதான் செல்வார்கள். அவர்களாலேயே அதை சொல்ல முடியாது. அவர்கள் இதை கனவு கண்டிருக்கவும் மாட்டார்கள். அவர்கள், தொடர் இலக்கம் 9499தையும், வெற்றிப்பணம் எழுபத்தைந்தாயிரம் ரூபிள்களையும் மாத்திரம் நினைத்து கற்பனைக்குள் போய்விட்டார்கள்.
ഭാര്യാഭർത്താക്കന്മാർ പരസ്പരം നോക്കി നിശബ്ദമായി പുഞ്ചിരിച്ചു. തങ്ങളുടെ വിജയത്തെക്കുറിച്ചുള്ള ചിന്ത അവരെ സ്തബ്ധരാക്കി. ആ എഴുപത്തയ്യായിരം റൂബിളുകൾ രണ്ടുപേർക്കും എന്ത് ഗുണം ചെയ്യും? അവർ എന്ത് വാങ്ങും? അവർ എങ്ങോട്ടാണ് പോകുന്നത്? അവർക്ക് അത് സ്വയം പറയാൻ കഴിയില്ല. അവർ ഇത് സ്വപ്നം പോലും കണ്ടിട്ടുണ്ടാകില്ല. 9499 എന്ന സീരിയൽ നമ്പറിനെയും 75,000 റൂബിളുകളുടെ വിജയത്തെയും കുറിച്ച് മാത്രം ചിന്തിച്ചുകൊണ്ട് അവർ ഭാവനയിൽ മുഴുകി.
21
  Ivan, holding the paper in his hand, walked several times from corner to corner, and only when he had recovered from the first impression began dreaming a little.
  வான், பத்திரிகையை கையில் பிடித்துக்கொண்டு, மூலைக்கு மூலை பல முறை நடந்தார். அவர் தனது எண்ணங்களிலிருந்து மீண்ட பிறகு, கொஞ்சம் கனவு காணத்தொடங்கினார்.
  വാൻ, മാസിക കയ്യിൽ പിടിച്ചുകൊണ്ട്, പലതവണ മൂലയിൽ നിന്ന് മൂലയിലേക്ക് നടന്നു. ചിന്തകളിൽ നിന്ന് മുക്തനായപ്പോൾ, അയാൾ ചെറുതായി സ്വപ്നം കാണാൻ തുടങ്ങി.
22
“And if we have won, it will be a new life. A transformation! The ticket is yours, but if it were mine, I should, first of all, of course, spend twenty-five thousand on real property in the shape of an estate; ten thousand on immediate expenses, new furnishing, travelling, paying debts, and so on, The other forty thousand I would put in the bank and get interest on it.” Ivan said.
“நாம் வெற்றி பெற்றால், அது ஒரு புதிய வாழ்க்கையாக இருக்கும், அது ஒரு மாற்றமாக இருக்கும். இந்த சீட்டு உன்னுடையது, என்னுடையதாக இருந்திருந்தால், முதலில், கட்டாயமாக, இருபத்தைந்தாயிரம் ரூபிள்களை வீடு வாங்க செலவிடுவேன். உடனடி செலவுக்கு பத்தாயிரம் செலவிடுவேன். புதிய வீட்டு தளபாடங்கள், பயணங்கள், கடன்களை கட்டிமுடித்தல், இதை போன்ற பல. மிஞ்சிய நாற்பதாயிரத்தை வங்கியில் வட்டிக்கு போடுவேன்.” இவான் கூறினார்.
“നമ്മൾ ജയിച്ചാൽ, അത് ഒരു പുതിയ ജീവിതമായിരിക്കും, ഒരു മാറ്റമായിരിക്കും. ഈ ടിക്കറ്റ് നിങ്ങളുടേതാണ്. ഇത് എന്റേതാണെങ്കിൽ, ഞാൻ ആദ്യം ഇരുപത്തയ്യായിരം റൂബിൾസ് ഒരു വീട് വാങ്ങാൻ ചെലവഴിക്കും. അടിയന്തര ചെലവുകൾക്കായി പതിനായിരം ചെലവഴിക്കും. പുതിയ ഫർണിച്ചറുകൾ, യാത്രകൾ, കടങ്ങൾ വീട്ടൽ, അങ്ങനെ പലതും. ബാക്കി നാല്പതിനായിരം ഞാൻ പലിശയ്ക്ക് ബാങ്കിൽ നിക്ഷേപിക്കും.” ഇവാൻ പറഞ്ഞു.
23
“Yes, an estate, that would be nice,” said Masha, sitting down and dropping her hands in her lap.
“ஆமாம், ஒரு பெரிய வீடு, அது நன்றாக இருக்கும்”, என்று மாஷா கீழே அமர்ந்து தன் கைகளை மடியில் போட்டபடி சொன்னார்.
“അതെ, വലിയൊരു വീട്, അത് നന്നായിരിക്കും.” മാഷ ഇരുന്ന് അവളുടെ മടിയിൽ കൈകൾ കൂപ്പി പറഞ്ഞു.
24
“Somewhere in the Tula or Oryol provinces. In the first place, we shouldn’t need a summer villa; besides, it would always bring in an income,” Masha further added.
“எங்கேயாவது துலா அல்லது ஓரியோல் மாகாணங்களில்! நமக்கு கோடைகால பங்களா தேவையில்லை. அத்தோடு, அது எப்போதும் வருமானத்தைக்கொண்டுவரும்.” மாஷா மேலும் கூறினார்.
“തുല അല്ലെങ്കിൽ ഒറിയോൾ പ്രേദേശങ്ങളിൽ എവിടെയെങ്കിലും. ഞങ്ങൾക്ക് ഒരു വേനൽക്കാല ബംഗ്ലാവ് ആവശ്യമില്ല. മാത്രമല്ല, അത് എപ്പോഴും വരുമാനം കൊണ്ടുവരും.” മാഷ കൂട്ടിച്ചേർത്തു.
25
And pictures came crowding on his imagination, each more gracious and poetical than the last. And in all these pictures, he saw himself well-fed, serene, healthy, and felt warm, even hot!
அவரது கற்பனையில் பல காட்சிகள் குவியத்தொடங்கின. ஒவ்வொன்றும் கடந்ததை விட மிகவும் அருமையாகவும் கவிதைத்தன்மையுடனும் இருந்தன. இந்த காட்சிகளில் எல்லாம், அவர் நன்றாக உண்பவராகவும், அமைதியானவராகவும், ஆரோக்கியமானவராகவும் தான் இருப்பதாக உணர்ந்தார்.
അദ്ദേഹത്തിന്റെ ഭാവനയിൽ പല രംഗങ്ങളും മനസ്സിലേക്ക് കടന്നുവരാൻ തുടങ്ങി. ഓരോന്നും മുമ്പത്തേതിനേക്കാൾ മനോഹരവും കാവ്യാത്മകവുമായിരുന്നു. ഈ രംഗങ്ങളിലെല്ലാം, താൻ നന്നായി ഭക്ഷണം കഴിക്കുന്നതായും, ശാന്തനായും, ആരോഗ്യവാനാണെന്നും അയാൾക്ക് തോന്നി.
26
After eating a summer soup cold as ice, he lay on his back on the burning sand close to a stream or in the garden under a lime tree. It is hot. His little boy and girl crawl near him, digging in the sand or catching ladybirds in the grass. He dozes sweetly, thinking of nothing and feeling all over that he need not go to the office today, tomorrow, or the day after.
இந்த கற்பனையில், ஒரு பனிக்கட்டி போன்ற குளிர்ச்சியான ஒரு கோடைகால பாணம் அருந்தியபடி, ஒரு ஓடைக்கு அருகில் இருக்கும் ஒரு தேசி மரத்தின் நிழலின் கீழ், எரியும் மணலின் அண்ணாந்து பார்த்தபடி படுத்திருக்கிறார். அங்கு கொடிய வெப்பம். அவரின் மகனும் மகளும், ஊர்ந்து நகர்ந்தபடி, மணலில் தோண்டி விளையாடி அல்லது புல்லில் வெட்டுக்கிளிகளை பிடித்துக்கொண்டிருக்கிறார்கள். இன்றையோ, நாளையோ, மறுநாளோ வேலைக்குச்செல்லத்தேவையில்லை என்று, எதையுமே நினைக்காமல், இனிமையாக மயங்கிக்கிடக்கிறார்.
ഈ ഫാന്റസിയിൽ, അവൻ ഒരു അരുവിക്കരയിലുള്ള ഒരു ദേശി മരത്തിന്റെ തണലിൽ കിടന്ന്, തണുത്ത വേനൽക്കാല പാനീയം കുടിച്ചുകൊണ്ട്, കത്തുന്ന മണലിലേക്ക് നോക്കിക്കൊണ്ടിരുന്നു... അസഹനീയമായ ചൂട്... മകനും മകളും ഇഴഞ്ഞു നീങ്ങുകയോ, മണലിൽ കുഴിയിടുകയോ അല്ലെങ്കിൽ പുൽച്ചാടികളെ പിടിക്കുകയോ ചെയ്യുകയായിരുന്നു. അവൻ ഒന്നിനെക്കുറിച്ചും ചിന്തിക്കാതെ, ഇന്നോ, നാളെയോ, മറ്റന്നാളോ ജോലിക്ക് പോകേണ്ടതില്ലാതെ, സുഖമായി ഉറങ്ങുകയാണ്.
27
Or, tired of lying still, he goes to the hayfield or the forest for mushrooms or watches the peasants catching fish with a net.
அல்லது, அசையாமல் இருந்ததினால் களைத்துப்போய், அவர் வைக்கோல் புல்தரைக்கோ அல்லது காட்டுக்குள் காளான்கள் பறிப்பதற்காக செல்கிறார், அல்லது மீனவர்கள் வலைபோட்டு மீன் பிடிப்பதைப்பார்த்து ரசிக்கிறார்.
അല്ലെങ്കിൽ, നിശ്ചലമായി ഇരിക്കുന്നതിൽ മടുത്ത്, അവൻ പുൽത്തകിടിയിലേക്കോ കാട്ടിലേക്കോ കൂൺ പറിക്കാൻ പോകുന്നു, അല്ലെങ്കിൽ മത്സ്യത്തൊഴിലാളികൾ വല വീശി മീൻ പിടിക്കുന്നത് കണ്ട് ആസ്വദിക്കുന്നു.
28
When the sun sets, he takes a towel and soap and saunters to the bathing shed, where he undresses at his leisure, slowly rubs his bare chest with his hands, and goes into the water. And in the water, near the opaque soapy circles, little fish flit to and fro and green water-weeds nod their heads.
சூரியன் அஸ்தமிக்கும் மாலை நேரம், அவர் ஒரு துவாலையையும் சோப்பையும் எடுத்தபடி குளியல் கொட்டகையை நோக்கி நடக்கிறார். அங்கு அவர் தனது ஆடைகளை மெதுவாக அவிழ்த்து, மென்மையாக தனது வெற்று மார்பை கைகளால் தேய்த்தபடி, தண்ணீருக்குள் மூழ்குகிறார். தண்ணீரில், ஒளிபுகா நுரை வட்டங்களுக்குள், சிறிய மீன்கள் அங்கும் இங்கும் நீந்துகின்றன. பச்சை தண்ணீர் தாவரங்கள் தலையை அங்குமிங்கும் ஆட்டுகின்றன.
വൈകുന്നേരമായി, സൂര്യൻ അസ്തമിക്കുന്നു, അവൻ ഒരു തൂവാലയും സോപ്പും എടുത്ത് ബാത്ത്ഹൗസിലേക്ക് നടക്കുന്നു. അവിടെ വെച്ച് അയാൾ പതുക്കെ വസ്ത്രങ്ങൾ അഴിച്ചുമാറ്റി, കൈകൾ കൊണ്ട് നഗ്നമായ നെഞ്ചിൽ പതുക്കെ തടവി, വെള്ളത്തിലേക്ക് മുങ്ങുകയും ചെയ്യുന്നു. വെള്ളത്തിൽ, നുരകളുടെ അതാര്യമായ വൃത്തങ്ങൾക്കുള്ളിൽ, ചെറിയ മത്സ്യങ്ങൾ അവിടെയും ഇവിടെയും നീന്തുന്നു. പച്ച ജലസസ്യങ്ങൾ തലയാട്ടി നീങ്ങുന്നു.
29
After bathing, there is tea with cream and milk rolls. In the evening, a walk or vint with the neighbours.
குளித்து வெளியே வந்த பின், உண்பதற்கு பாலேடு கலந்த தேநீருடன் பலவகை தின்பண்டங்களும் உள்ளன. மாலையில் அண்டை வீட்டாருடன் சேர்ந்து ஒரு சின்ன மதுபானம் அருந்துகிறார், அல்லது ஒரு தனியே சின்ன மாலை உலா போகிறார்.
കുളി കഴിഞ്ഞ് പുറത്തിറങ്ങിയാൽ കഴിക്കാൻ പലതരം ലഘുഭക്ഷണങ്ങളുണ്ട്, രുചി കൂട്ടുന്ന ചായയും. വൈകുന്നേരം, അവൻ അയൽക്കാരോടൊപ്പം ഒരു ചെറിയ പാനീയം ആസ്വദിക്കും, അല്ലെങ്കിൽ ഒറ്റയ്ക്ക് വൈകുന്നേരം നടക്കാൻ പോകും.
30
“Yes, it would be nice to buy an estate,” said Masha, also dreaming. Her face revealed that she was enchanted by her thoughts.
கணவனைப்போல மனைவியும் கனவுகள் பல கண்டார். “ஆமாம், ஒரு பங்களா வாங்கினால் நன்றாக இருக்கும்.” என்றாள் மாஷா. நினைவுகளில் அவளும் மயங்கிக்கிடந்தது அவள் முகத்திலிருந்தே தெரிந்தது.
ഭർത്താവിനെപ്പോലെ ഭാര്യയ്ക്കും ധാരാളം സ്വപ്നങ്ങൾ ഉണ്ടായിരുന്നു. “അതെ, ഒരു ബംഗ്ലാവ് വാങ്ങുന്നത് നന്നായിരിക്കും.” അവൾ പറഞ്ഞു, അവളും ഓർമ്മകളിൽ മുഴുകിയിരിക്കുന്നതായി അവളുടെ മുഖം കാണിച്ചു.
31
Ivan pictured himself in autumn with its rains, cold evenings, and St. Martin’s summer. During that season, he would have to take longer walks around the garden and beside the river to get thoroughly chilled.
இவான், இலையுதிர் காலத்துடனும், அதன் மழையுடனும், அதன் குளிர்மையான மாலைகளுடனும், இலையுதிர்காலங்களில் தோன்றும் செயின்ட் மார்ட்டின் கோடைகாலங்களுடனும், தன்னை இணைத்துப்பார்த்துக்கொண்டார். அந்த பருவகாலங்களில் தான் தோட்டத்திலும் ஆற்றங்கரையிலும் நன்றாக குளிர் பிடிக்கும் வரை நீண்ட நேரம் நடக்க வேண்டும்.
ശരത്കാലവുമായും, അതിന്റെ മഴയുമായും, അതിന്റെ തണുത്ത വൈകുന്നേരങ്ങളുമായും, ശരത്കാലത്ത് പ്രത്യക്ഷപ്പെടുന്ന സെന്റ് മാർട്ടിൻ വേനൽക്കാലവുമായും ഇവാൻ താദാത്മ്യം തന്നെ പ്രാപിച്ചു. ആ സമയങ്ങളിൽ നന്നായി തണുക്കുന്നത് വരെ നമ്മൾ തോട്ടത്തിലും നദിക്കരയിലും ദീർഘനേരം നടക്കണം.
32
Then return home drink a big glass of vodka, eat a salted mushroom or a soused cucumber, and drink another.
பின்னர் வீடு வந்து ஒரு பெரிய கண்ணாடி குவளையில் வடித்து எடுக்கப்பட்ட வொட்காவைக்குடித்து, உப்பு சேர்க்கப்பட்ட காளான் அல்லது வெள்ளரிக்காய் ஊறுகாய்களை உண்ட பின்னர், மீண்டும் குடிக்க வேண்டும்.
പിന്നെ, വീട്ടിലെത്തിയ ശേഷം, ഒരു വലിയ ഗ്ലാസിലേക്ക് അരിച്ചെടുത്ത വോഡ്ക കുടിക്കനം, ഉപ്പിട്ട കൂൺ അല്ലെങ്കിൽ വെള്ളരിക്ക അച്ചാറുകൾ കഴിക്കണം, വീണ്ടും വോഡ്ക കുടിക്കണം.
33
The children would come running from the kitchen garden, bringing a carrot and a radish smelling of fresh earth. And then, he would lie stretched full length on the sofa and in leisurely fashion, turn over the pages of some illustrated magazine or, covering his face with it and unbuttoning his waistcoat, give himself up to slumber.
பிள்ளைகள் வீட்டுத்தோட்டத்திலிருந்து கரட்டுகளையும் புதிய மண் வாசனையுள்ள முள்ளங்கிகளையும் எடுத்துக்கொண்டு ஓடி வருவார்கள். அவைகளை சமைத்து சாப்பிட வேண்டும். பின்னர், அவர் சோபாவில் நீளமாக கால் நீட்டி படுத்தபடி, மற்றும் சில மாதாந்த படங்கள் கொண்ட பத்திரிகைகளின் பக்கங்களை நிதானமாக புரட்ட வேண்டும். அல்லது, அந்த புத்தகங்களால் தன் முகத்தை மூடிக்கொண்டு, இடுப்பளவுச்சட்டையின் பொத்தான்களை அவிழ்த்துவிட்ட பின், ஒரு குட்டித்தூக்கத்தில் ஆழ்ந்து விடவேண்டும்.
കുട്ടികൾ പൂന്തോട്ടത്തിലേക്ക് ഓടിപ്പോയി, കാരറ്റും, മണ്ണുകൊണ്ടുള്ള മുള്ളങ്കിയും പറിക്കും. അവ പാകം ചെയ്ത് കഴിക്കണം. പിന്നെ, അവൻ സോഫയിൽ കാലുകൾ നീട്ടി കിടന്ന്, മാസികാ ചിത്ര മാസികകളുടെ പേജുകൾ പതുക്കെ മറിച്ചുനോക്കണം. അല്ലെങ്കിൽ, ആ പുസ്തകങ്ങൾ കൊണ്ട് മുഖം മറച്ച്, അരയോളം നീളമുള്ള ഷർട്ടിന്റെ ബട്ടൺ അഴിച്ച്, ഒരു മയക്കം എടുക്കണം.
34
Now, here, The St. Martin’s summer is followed by cloudy, gloomy weather. It rains day and night, the bare trees weep and the wind is damp and cold. The dogs, the horses, the fowls are all wet, depressed, downcast. There is nowhere to walk; one can’t go out for days together; one has to pace up and down the room, looking despondently at the grey window. It is dreary!
இப்பொழுது, இங்கே, இலையுதிர்காலத்தின் பிற்பகுதியில் வழக்கத்திற்கு மாறாக வரும் வெப்பமான காலநிலையை தொடர்ந்து மேகமூட்டமான, இருண்ட வானிலை வர ஆரம்பித்திருக்கின்றது. இரவும் பகலும் தொடர்ந்து மலை பெய்கின்றது. இலை உதிர்ந்து போயிருந்த மரங்களெல்லாம் அழுகின்றன. காற்று ஈரப்பதனுடனும் குளிராகவும் இருக்கின்றது. நாய்களும் குதிரைகளும் கோழிகளும் நனைந்து மனச்சோர்வாக இருக்கின்றன. நடப்பதற்கு இங்கு இடம் எங்கும் இருக்கவில்லை. ஒருவரும் வெளியே போக முடியாத நிலை. அறையினுள் மேலும் கீழும் நடப்பது மாத்திரம் தான் உண்டு. விரக்தியுடன் வெளிறிய ஜன்னலைப்பார்த்தால், அது மந்தமாக இருக்கின்றது.
ഇപ്പോൾ, ഇവിടെ, ശരത്കാലത്തിന്റെ അവസാനത്തിലെ അസാധാരണമായ ചൂടുള്ള കാലാവസ്ഥയ്ക്ക് ശേഷം മേഘാവൃതവും ഇരുണ്ടതുമായ കാലാവസ്ഥ ആരംഭിക്കുന്നു. രാവും പകലും തുടർച്ചയായി മഴ പെയ്യുന്നു. ഇലകൾ കൊഴിഞ്ഞ മരങ്ങളെല്ലാം കരയുന്നതുപോലെയാണ്. വായു ഈർപ്പമുള്ളതും തണുപ്പുള്ളതുമാണ്. നായ്ക്കളും കുതിരകളും കോഴികളും നനഞ്ഞും വിഷാദത്തിലേറിപ്പോയിരിക്കുന്നു. എങ്ങും നടക്കാൻ ഇടമില്ലായിരുന്നു. ആർക്കും പുറത്തിറങ്ങാൻ പറ്റില്ല. മുറിയിൽ മുകളിലേക്കും താഴേക്കും നടക്കാൻ മാത്രമേ കഴിയൂ. നിരാശയോടെ വിളറിയ ജനാലയിലേക്ക് നോക്കിയാൽ അതും മങ്ങിയതായിരിക്കും.
35
Ivan, who was walking up and down, stopped and looked at Masha.
மேலும் கீழும் நடந்து கொண்டிருந்த இவான் நின்று மாஷாவை பார்த்தார்.
മുകളിലേക്കും താഴേക്കും നടന്നുകൊണ്ടിരുന്ന ഇവാൻ നിർത്തി മാഷയെ നോക്കി.
36
“I should go abroad, you know, Masha,” Ivan said.
“நான் வெளிநாடு போக வேண்டும். உனக்கு தெரியுமா மாஷா”, என்றார்.
“എനിക്ക് വിദേശത്ത് പോകണം. അറിയാമോ മാഷേ,” അവൻ പറഞ്ഞു.
37
Ivan began thinking how nice it would be in late autumn to go abroad, somewhere in the South of France, to Italy, or to India!
அவர், இலையுதிர்காலங்களின் இருண்ட காலங்களில், பிரான்ஸ், இத்தாலி, இந்தியா போன்ற வெளிநாடுகளுக்கு போவது எவ்வளவு மகிழ்ச்சியான விடயம் என்று சிந்திக்க ஆரம்பித்தார்.
ശരത്കാലത്തിന്റെ ഇരുണ്ട മണിക്കൂറുകളിൽ ഫ്രാൻസ്, ഇറ്റലി, ഇന്ത്യ തുടങ്ങിയ വിദേശ രാജ്യങ്ങളിലേക്ക് പോകുന്നത് എത്ര ആനന്ദകരമാകുമെന്ന് അവൻ ചിന്തിക്കാൻ തുടങ്ങി.
38
“I should certainly go abroad too. But look at the number of the ticket!” Masha said.
“நானும் கட்டாயம் வெளிநாடு போகவேண்டும். முதலில் சீட்டின் இலக்கங்களை பாருங்கள்!” மாஷா சொன்னார்.
“എനിക്കും വിദേശത്തേക്ക് പോകണം. ആദ്യം ടിക്കറ്റിലെ നമ്പറുകൾ നോക്കൂ!” മാഷ പറഞ്ഞു.
39
“Wait! Wait!” Ivan walked about the room and went on thinking. It occurred to him: ‘What if Masha really did go abroad?’ It is pleasant to travel alone or in the society of light, careless women who live in the present, and not such as think and talk all the journey about nothing but their children, sigh, and tremble with dismay over every farthing.
“நில்! நில்!” இவான் அறையை சுற்றி நடந்து யோசித்துக்கொண்டே இருந்தார். ‘உண்மையாகவே மாஷா வெளிநாடு போய் விட்டாள் என்றால்?’ அவர் மனதில் தோன்றியது. தனிமையில் பயணிப்பது இனிமையானது. வெளிச்சமான சமுதாயத்தில், நிகழ்காலத்தில் எதிலும் கவலையில்லாமல் வாழும் பெண் இவள், தன் குழந்தைகளைத்தவிர வேறெதையும் பற்றி யோசிப்பதும் பேசுவதும் இல்லை, எதற்கும் பெருமூச்சு விடுகிறாள், தூரங்களை திகைப்புடன் பார்த்து நடுங்குகிறாள்.
“നിൽ! നിൽ!” ഇവാൻ മുറിയിൽ ചുറ്റിനടന്നു ചിന്തിച്ചു. ‘മാഷ ശരിക്കും വിദേശത്തേക്ക് പോകുമോ?’ അയാൾ ചിന്തിച്ചു. ഒറ്റയ്ക്ക് യാത്ര ചെയ്യുന്നത് സുഖകരമാണ്. ഒന്നിനെക്കുറിച്ചും ആകുലപ്പെടാതെ, വർത്തമാനകാലത്ത്, ശോഭനമായ ഒരു സമൂഹത്തിൽ ജീവിക്കുന്ന ഒരു സ്ത്രീയാണവൾ. മക്കളെക്കുറിച്ചല്ലാതെ മറ്റൊന്നിനെക്കുറിച്ചും അവൾ ചിന്തിക്കുകയോ സംസാരിക്കുകയോ ചെയ്യുന്നില്ല. അവൾ ഒന്നും മിണ്ടാതെ നെടുവീർപ്പിടുന്നു. അവൾ വിറയ്ക്കുന്നു, ഭയത്തോടെ ദൂരത്തേക്ക് നോക്കി.
40
Ivan imagined Masha on the train with a multitude of parcels, baskets, and bags. She would sigh over something, complaining that the train gave her a headache and that she had spent so much money. At the stations, he would continually have to run for boiling water, bread, and butter. She wouldn’t have any dinner because it was too late.
இவான், ரயிலில் ஏராளமான பார்சல்களுடனும், கூடைகளுடனும், பைகளுடனும் மாஷா பயணிப்பதை கற்பனை செய்து பார்த்தார். ‘அவள் காரணமின்றி பெருமூச்சு விடுவாள். ரயிலின் சத்தத்தால் தன் தலை வலிக்கிறது என்பாள். இவ்வளவு பணம் செலவழித்துவிட்டேன் என்று முறையிடுவாள். புகையிரத நிலயங்களில் தான் நிச்சயம் சுடு தண்ணீருக்காகவும், பானுக்கும் வெண்ணைக்கும் தொடர்ந்து ஓட வேண்டியிருக்கும். எது மிகவும் விரும்பிய உணவாக இருந்தாலும், அதை அவள் சாப்பிட மாட்டாள்.’
ധാരാളം പാഴ്സലുകളും, കൊട്ടകളും, ബാഗുകളുമായി മാഷ ട്രെയിനിൽ യാത്ര ചെയ്യുന്നത് ഇവാൻ ചിന്തിച്ചു. ‘അവൾ കാരണമില്ലാതെ നെടുവീർപ്പിടും. ട്രെയിനിന്റെ ശബ്ദം കേട്ട് തല വേദനിക്കുന്നുണ്ടെന്ന് അവൾ പറയും. അവർ ഇത്രയും പണം ചെലവഴിച്ചുവെന്ന് അവൾ പരാതിപ്പെടും. തീവണ്ടി സ്റ്റേഷനുകളിൽ വെച്ചാണ് ചൂടുവെള്ളത്തിനും, അരിക്കും, വെണ്ണയ്ക്കും വേണ്ടി നിങ്ങൾ തീർച്ചയായും ഓടേണ്ടി വരും. അവളുടെ ഇഷ്ട ഭക്ഷണം കിട്ടിയാലും അവൾ അത് കഴിക്കില്ല.’
41
‘She would begrudge me every farthing,’ he thought, glancing at Masha.
‘ஒவ்வொரு நிலையிலும் அவள் என்னிடம் கெஞ்சுவாள்’, மாஷாவை பார்த்தபடி அவர் நினைத்தார்.
‘അവൾ എല്ലാ വഴികളിലും എന്നോട് യാചിക്കും’ മാഷയെ നോക്കി അയാൾ ചിന്തിച്ചു.
42
‘The lottery ticket is hers, not mine! Besides, what is the use of her going abroad? What does she want there? She would shut herself up in the hotel and not let me out of her sight. I know!‘
‘இந்த லோட்டரி சீட்டு அவளுடையது. என்னுடையது அல்ல. அதுமட்டுமின்றி, அவள் வெளிநாடு சென்று என்ன பயன்? அவளுக்கு அங்கே என்ன வேண்டும்? அவள் விடுதிக்குள்ளேயே தன்னை மூடிக்கொள்வாள். தனது பார்வையிலிருந்து என்னை வெளியே விடவும் மாட்டாள். எனக்கு தெரியும்!‘
‘ഈ ലോട്ടറി ടിക്കറ്റ് അവളുടേതാണ്. എന്റേതല്ല. മാത്രമല്ല, അവൾ വിദേശത്തേക്ക് പോകുന്നതിന്റെ അർത്ഥമെന്താണ്? അവൾക്ക് അവിടെ എന്താണ് വേണ്ടത്? അവൾ ഹോട്ടലിനുള്ളിൽ തന്നെത്തന്നെ പൂട്ടിയിടും. അവൾ എന്നെ അവളുടെ കണ്ണിൽ നിന്ന് മാറാൻ അനുവദിക്കില്ല. എനിക്കറിയാം!‘
43
And for the first time in his life, his mind dwelt on the fact that his wife had grown elderly and plain and that she was saturated through and through with the smell of cooking, while he was still young, fresh, and healthy, and might well have got married again.
தனது வாழ்க்கையில் முதல்முறையாக தனது மனைவி வயது முதிர்ந்தவளாகவும் எதையும் செய்ய முடியாதவளாகவும் இருக்கிறாள் என அவர் மனதில் பதிய ஆரம்பித்தது. மேலும் அவள் எப்போதும் முழுவதும் சமையல் வாடையால் கிடந்தாள். ஆனால், அவர் இன்னும் இளமையாகவும், புதியதாகவும் ஆரோக்கியமாகவும் தான் இருப்பதாகவும், மீண்டும் தான் திருமணம் செய்யக்கூடியவராக இருப்பதாகவும் நினைத்தார்.
ജീവിതത്തിൽ ആദ്യമായി, ഭാര്യ വൃദ്ധയാണെന്നും ഒന്നും ചെയ്യാൻ കഴിയാത്ത അവസ്ഥയിലാണെന്നും അയാൾക്ക് മനസ്സിലായി തുടങ്ങി. അവൾ എപ്പോഴും പാചക പുകയാൽ മൂടപ്പെട്ടിരുന്നു. പക്ഷേ അയാൾ ഇപ്പോഴും ചെറുപ്പവും, പുതുമയും, ആരോഗ്യവാനും ആണെന്നും, വീണ്ടും വിവാഹം കഴിക്കാമെന്നും കരുതി.
44
‘Of course, all that is silly nonsense,’ he thought, ‘but why should she go abroad? What would she make of it? And yet she would go, of course. I can fancy. In reality, it is all one to her, whether Naples or Klin. She would only be in my way. I should be dependent upon her. I can fancy how, like a regular woman, she will lock the money up as soon as she gets it. She will look after her relations and grudge me every farthing’
‘நிச்சயமாக, இதெல்லாம் முட்டாள்தனமான எண்ணங்கள்’, அவர் நினைத்தார். ‘ஆனாலும், அவள் ஏன் வெளிநாடு செல்ல வேண்டும்? அதனால் அவளுக்கு என்னதான் லாபம்? இன்னும் சொன்னால், அவள் நிச்சயமாக போவாள். என்னால் அதை நினைத்து பார்க்க முடியும். நிஜத்தில், அது எல்லாம் அவளைபொருத்தது, அது ‘நேபிள்ஸ்’ஸா அல்லது ‘க்ளின்’னா என்று. அவள் எப்போதும் எனக்கு குறுக்கே தான் இருப்பாள். நான் அவளிடம் தங்கி இருக்கத்தான் வேண்டி வரும். என்னால் கற்பனை செய்து பார்க்க முடிகிறது, ஒரு சாதாரண பெண்ணைப்போல், அவள் பணம் கிடைத்தவுடன் அதைப்பூட்டிவைப்பாள். அவள் தனது உறவினர்களை நன்றாக கவனித்துக்கொண்டு என்னை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு பழி வாங்குவாள்.’
‘തീർച്ചയായും, ഇതെല്ലാം മണ്ടത്തരമായ ചിന്തകളാണ്,’ അയാൾ ചിന്തിച്ചു. ‘പക്ഷേ അവൾ എന്തിന് വിദേശത്തേക്ക് പോകണം? അതുകൊണ്ട് അവൾക്ക് എന്ത് പ്രയോജനം? മാത്രമല്ല, അവൾ തീർച്ചയായും പോകും... എനിക്ക് അത് സങ്കൽപ്പിക്കാൻ കഴിയുന്നു... വാസ്തവത്തിൽ, എല്ലാം അവൾക്ക് യോജിച്ചത്, അത് ‘നേപ്പിൾസ്’ ആയാലും ‘ഗ്ലിൻ’ ആയാലും... അവൾ എപ്പോഴും എന്റെ എതിർവശത്തായിരിക്കും. ഞാൻ അവളോടൊപ്പം നിൽക്കണം. ഒരു സാധാരണ സ്ത്രീയെപ്പോലെ, പണം കിട്ടിയാലുടൻ അവൾ അത് പൂട്ടിയിടുമെന്ന് എനിക്ക് സങ്കൽപ്പിക്കാൻ കഴിയുന്നു... അവൾ അവളുടെ ബന്ധുക്കളെ നന്നായി പരിപാലിക്കുകയും കഴിയുന്നത്ര എന്നോട് പ്രതികാരം ചെയ്യുകയും ചെയ്യും.’
45
Ivan thought of her relations. ‘All those wretched brothers and sisters and aunts and uncles would come crawling about as soon as they heard of the winning ticket, whining like beggars and fawning upon them with oily, hypocritical smiles. Wretched, detestable people! If they were given anything, they would ask for more, while if they were refused, they would swear at them, slander them, and wish them every kind of misfortune’
இவான், அவளது உறவினர்களை ஒரு முறை சிந்தித்துப்பார்த்தார். செய்தி கேள்விப்பட்டவுடன், அவளது கேவலம் பிடித்த சகோதர சகோதரிகள், அத்தைகள், மாமாக்கள் எல்லாம் எங்கள் வாழ்க்கைக்குள் ஊர்ந்து வரத்தொடங்கிவிடுவார்கள். பிச்சைக்காரர்கள் போல அணுங்கத்தொடங்கிவிடுவார்கள். எண்ணெய் பூசப்பட்டது போல், பாசாங்குத்தனமான புன்னகையுடன் ஆரம்பிப்பார்கள். கேவலமான, வெறுக்கத்தக்க மக்கள் அவர்கள். அவர்களுக்கு ஏதாவது கொடுத்தால் கூட, இன்னும் அதிகமாகக்கேட்பார்கள். அவர்களுக்கு எதுவும் கொடுக்கப்படாவிட்டால், திட்டுவார்கள், அவதூறு செய்வார்கள், எல்லா வகையான துரதிர்ஷ்டங்களையும் எங்கள் வாழ்க்கையில் நடக்கவேண்டுமென விரும்புவார்கள்.
ഇവാൻ ഒരു നിമിഷം അവളുടെ ബന്ധുക്കളെക്കുറിച്ച് ചിന്തിച്ചു. ആ വാർത്ത കേൾക്കുന്നതോടെ, അവളുടെ ശല്യക്കാരായ സഹോദരങ്ങളും, അമ്മായിമാരും, അമ്മാവന്മാരും നമ്മുടെ ജീവിതത്തിലേക്ക് കടന്നുവരാൻ തുടങ്ങും. അവർ യാചകരെപ്പോലെ അടുത്തേക്ക് വരാൻ തുടങ്ങും. എണ്ണ തേച്ചതുപോലെ, ഒരു കപട പുഞ്ചിരിയോടെയായിരിക്കും അവർ തുടങ്ങുക. അവർ അറപ്പുണ്ടാക്കുന്ന, വെറുപ്പുണ്ടാക്കുന്ന ആളുകളാണ്. ഞങ്ങൾ അവർക്ക് എന്തെങ്കിലും നൽകിയാലും അവർ കൂടുതൽ ചോദിക്കും. അവർക്ക് ഒന്നും നൽകിയില്ലെങ്കിൽ, അവർ ശകാരിക്കുകയും, അപവാദം പറയുകയും, ഞങ്ങളുടെ ജീവിതത്തിൽ എല്ലാത്തരം നിർഭാഗ്യങ്ങളും ആശംസിക്കുകയും ചെയ്യും.
46
Ivan remembered his own relations, and the faces of those at whom he had looked impartially in the past struck him now as repulsive and hateful.
இவான், தன் உறவினர்களையும் ஒருமுறை யோசித்துப்பார்த்தார். கடந்த காலங்களில் பாரபட்சமின்றி பார்த்த அவர்களது முகங்கள், இன்று வெறுப்பூட்டுவதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் இருந்தது.
ഇവാൻ തന്റെ ബന്ധുക്കളെക്കുറിച്ചും ചിന്തിച്ചു. മുൻകാലങ്ങളിൽ നിഷ്പക്ഷമായി കണ്ടിരുന്ന അവരുടെ മുഖങ്ങൾ ഇപ്പോൾ അറപ്പുള്ളതും വെറുപ്പു നിറഞ്ഞതുമായിരുന്നു.
47
‘They are such reptiles!’ he thought.
‘என் உறவினர்களும் வெறும் ஊர்வன இனத்தைச்சேர்ந்தவர்கள்’ என்று அவர் நினைத்துக்கொண்டார்.
‘എന്റെ ബന്ധുക്കളും വെറും ഉരഗങ്ങളാണ്’ അവൻ മനസ്സിൽ ചിന്തിച്ചു.
48
And Masha’s face, too, struck him as repulsive and hateful. Anger surged up in his heart against her.
மாஷாவின் முகம் கூட, அவருக்கு இப்போ, வெறுப்பூட்டுவதாகவும் வெறுக்கத்தக்கதாகவும் இருந்தது. அவளுக்கு எதிரான பகை உணர்வுகள் அவர் இதயத்தில் அதிகரிக்க ஆரம்பித்தது.
മാഷയുടെ മുഖം പോലും ഇപ്പോൾ അയാൾക്ക് അറപ്പും വെറുപ്പും നിറഞ്ഞതായിരുന്നു. അവന്റെ ഹൃദയത്തിൽ അവളോടുള്ള ശത്രുതാപരമായ വികാരങ്ങൾ വളരാൻ തുടങ്ങി.
49
Now he started thinking malignantly: ‘She knows nothing about money, and so she is stingy. If she won, she would give me a hundred roubles and put the rest under lock and key’
அவர் தீங்கான முறையில் இப்போ சிந்திக்க ஆரம்பித்தார்: ‘அவளுக்கு பணத்தைப்பற்றி ஒன்றுமே தெரியாது. அத்தோடு, அவள் ஒரு கஞ்சத்தனம் நிறைந்த பெண். அவளுக்கு பணம் வந்து விட்டால், எனக்கு நூறு ரூபிள்கள் மாத்திரம் தந்து விட்டு மிகுதியை ஒளித்து வைத்து திறப்பால் பூட்டியும் விடுவாள்’
ഇവാൻ ഇപ്പോൾ ദ്രോഹപൂർവ്വം ചിന്തിക്കാൻ തുടങ്ങി: ‘അവൾക്ക് പണത്തെക്കുറിച്ച് ഒന്നും അറിയില്ല. മാത്രമല്ല, അവൾ ഒരു പിശുക്കൻ സ്ത്രീയാണ്. പണം കിട്ടുമ്പോൾ, അവൾ എനിക്ക് നൂറ് റൂബിൾ മാത്രമേ തരൂ, ബാക്കിയുള്ളത് ഒരു പൂട്ടിനും താക്കോലിനും കീഴിൽ ഒളിപ്പിക്കും.’
50
He looked at his wife, not with a smile now, but with hatred. She glanced at him, too, and also with hatred and anger. She had her own daydreams, her own plans and her own reflections. She understood perfectly well what her husband’s dreams were. She knew who would be the first to try to grab her winnings.
அவர் இப்போ தன் மனைவியை வெறுப்புடன் பார்த்தார், எந்த வித புன்னகையும் இல்லாமல். அவளும், அவரை வெறுப்புடனும் கோபத்துடனும் பார்த்தாள். அவளுக்கும், அவளது பகல் கனவுகளும், திட்டங்களும், பிரதிபலிப்புகளும் இருந்தன. தனது கணவனுக்கு என்ன கனவுகள் இருந்தது என்று அவளுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது. தனது வெற்றிப்பணத்தை யார் முதலில் கெட்டியாக பிடித்துக்கொள்வார்கள் என்றும் அவளுக்கு தெரிந்திருந்தது.
അയാൾ ഇപ്പോൾ ഭാര്യയെ വെറുപ്പോടെ നോക്കി, ഒരു പുഞ്ചിരിയും ഇല്ലാതെ. അവളും അവനെ വെറുപ്പോടെയും ദേഷ്യത്തോടെയും നോക്കി. അവൾക്കും അവളുടെ ദിവാസ്വപ്നങ്ങളും, പദ്ധതികളും, ചിന്തകളും ഉണ്ടായിരുന്നു. ഭർത്താവിന്റെ സ്വപ്നങ്ങൾ എന്താണെന്ന് അവൾക്ക് നന്നായി അറിയാമായിരുന്നു. തന്റെ വിജയങ്ങൾ ആദ്യം ആരാണ് കൈക്കലാക്കുകയെന്നും അവൾക്കറിയാമായിരുന്നു.
51
‘It’s very nice making daydreams at other people’s expense!’ is what her eyes expressed. ‘No, don’t you dare!’
“மற்றயவர்களுடைய வீழ்ச்சியில் பகல் கனவு காண்பது நன்றாகத்தான் இருக்கின்றது.” அவளது கண்கள் அதைச்சொன்னன. “இல்லை. அதை செய்யாதே.”
“മറ്റുള്ളവരുടെ പതനത്തെക്കുറിച്ച് ദിവാസ്വപ്നം കാണുന്നത് നല്ലതാണ്.” അവളുടെ കണ്ണുകൾ അത് പറഞ്ഞു. “വേണ്ട, അത് ചെയ്യരുത്.”
52
Her husband understood her look; hatred began stirring again in his breast.
அவர், அவள் பார்வையை புரிந்துகொண்டார். வெறுப்புணர்வு மீண்டும் அவர் நெஞ்சில் ஊசலாட ஆரம்பித்தது.
അവളുടെ കാഴ്ചപ്പാട് അയാൾക്ക് മനസ്സിലായി. അവന്റെ നെഞ്ചിൽ വീണ്ടും വെറുപ്പ് നുരഞ്ഞു പൊങ്ങാൻ തുടങ്ങി.
53
In order to annoy his wife, he glanced quickly, to spite her, at the fourth page of the newspaper and read out triumphantly; “Series 9499 number 46! Not 26!”
அவர், தன் மனைவியை வெறுப்பூட்டுவதற்காக, பத்திரிகையின் நாளாம் பக்கத்தை திருப்பி வெற்றியடைந்த மனநிலையில், “தொடர் 9499 இலக்கம் 46. 26 இல்லை”, என்றார்.
ഭാര്യയെ അലോസരപ്പെടുത്തിക്കൊണ്ട്, അയാൾ ദിനപത്രത്തിന്റെ നാലാമത് പേജ് മറിച്ചിട്ട് വിജയാഹ്ലാദത്തോടെ പറഞ്ഞു, “സീരിയൽ 9499, നമ്പർ 46. 26 കാണുന്നില്ല.”
54
Hatred and hope both disappeared at once, and it began immediately to seem to Ivan and Masha that their rooms were dark, small, and low-pitched, that the supper they had been eating was not doing them good but lying heavy on their stomachs, and that the evenings were long and wearisome.
வெறுப்புகளும் எதிர்பார்ப்புகளும் ஒரேயடியாக மறைந்தது போயின. இவானுக்கும் மாஷாவுக்கும் இப்போ அவர்களின் அறைகள் இருட்டாகவும் சிறியதாகவும் தாழ்வானதாகவும் இருப்பதாக தோன்றத்தொடங்கியது. அவர்கள் உண்ணும் உணவுகள் எந்தவித நல்லவைகளை செய்யாமல், வயிற்றிலேயே தங்கிவிடுவது போல அவருக்கு தோன்றியது. மாலை நேரங்கள் கூட நீண்டதாகவும் சோர்வானதாகவும் இருப்பதாக தோன்றியது.
വെറുപ്പും പ്രതീക്ഷകളും ഒരു നിമിഷം കൊണ്ട് അപ്രത്യക്ഷമായി. ഇവാനും മാഷയും ഇപ്പോൾ അവരുടെ മുറികൾ ഇരുണ്ടതും ചെറുതും താഴ്ന്നതുമാണെന്ന് തോന്നിത്തുടങ്ങി. അവർ കഴിക്കുന്ന ഭക്ഷണം ഒരു ഗുണവും ചെയ്യാതെ അവരുടെ വയറ്റിൽ ഇരിക്കുന്നതായി അയാൾക്ക് തോന്നി. വൈകുന്നേരങ്ങൾ പോലും നീണ്ടതും ക്ഷീണിപ്പിക്കുന്നതുമായി തോന്നി.
55
“What the devil’s the meaning of it? Wherever one steps, there are bits of paper under one’s feet, crumbs and husks. The rooms are never swept! One is simply forced to go out. Damnation, take my soul entirely! I shall go and hang myself on the first aspen tree!” said Ivan, beginning to be ill-humored.
“அதற்கான அர்த்தம் என்ன? காலடி எடுத்து வைக்கும் இடமெல்லாம் காகிதத்துண்டுகளும், துகள்களும், உமிகளும் இருக்கின்றன. அறைகள் எப்போதும் கூட்டப்படுவதில்லை. வெளியே கட்டாயம் போக வேண்டியதாய் இருக்கின்றது. சாபங்கள் என் ஆன்மாவை முழுவதுமாக எடுத்துக்கொள்ளும்! நான் முதலில் போய் ஆஸ்பென் மரத்தில் தொங்கப்போகிறேன்!” என்றார் இவான், ரசிக்கமுடியாத நகைச்சுவையுடன்.
“എന്താണ് അതിനർത്ഥം? നീ കാലുകുത്തുന്നിടത്തെല്ലാം കടലാസ് കഷ്ണങ്ങളും, കഷണങ്ങളും, തൊണ്ടുകളും കാണാം. മുറികൾ ഒരിക്കലും വൃത്തിയുള്ളതല്ല. എനിക്ക് പുറത്തു പോകണം. ശാപങ്ങൾ എന്റെ ആത്മാവിനെ കീഴടക്കും! ഞാൻ ഒരു ആസ്പൻ മരത്തിൽ തൂങ്ങിമരിക്കാൻ പോകുന്നു!” മോശം നർമ്മബോധത്തോടെ ഇവാൻ പറഞ്ഞു.
56
  1840 Words • 56 Rows
  1333 Words • 56 Rows
  1227 Words • 56 Rows