தமிழில்
உதயன்
Subhashini.org
  
நீல நரி
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
70 reads • Apr 2025
ஆமையும் முயலும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
71 reads • Apr 2025
கொக்கும் நண்டும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
98 reads • Apr 2025
நரியும் ஆடும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
89 reads • Apr 2025
ஆமையும் இரண்டு கொக்குகளும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
109 reads • Apr 2025
காக்கையும் நரியும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
116 reads • Apr 2025
பூனையும் எலிகளும்
வகை: சிறுவர் கதைகள் [விலங்குகள்]
85 reads • Mar 2025
பூனையும் எலிகளும்
உதயன்
 in English   தமிழில்   മലയാളത്തിൽ   All
மூல எழுத்தாளர்: தெரியவில்லை
மீள எழுதியது: உதயன்
  முன்னொரு காலத்தில், ஒரு பழைய வீட்டில், பல எலிகள் அவ்வீட்டின் பரணிலும், சுவர்களில் உள்ள பல துவாரங்களுக்குள்ளும் வாழ்ந்து வந்தன.
1
அவைகள் அங்கேயிருந்தும் இங்கேயிருந்தும் கிடைக்கும் உணவையெல்லாம் கொணர்ந்து தங்களுக்குள் பகிர்ந்துண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்துகொண்டிருந்தன.
2
அப்படி அனைத்து எலிகளும் மகிழ்ச்சியாக இருக்கும்போது ஒரு நாள், எங்கிருந்தோ ஒரு பூனை அந்த வீட்டிற்குள் எதிர்பாராத விதமாக வந்து சேர்ந்தது.
3
அந்த வீட்டில் உள்ளவர்களும் பூனையை தங்கள் வீட்டிற்கு அன்புடன் வரவேற்று தங்க அனுமதித்தனர்.
4
வீட்டில் அங்கும் இங்கும் எலிகள் ஓடித்திரிவதைக்கண்டதும், அந்த பூனை “ஆஹா! எங்கும் உணவு,” என்று நினைத்துவிட்டு, நிரந்தரமாக அவ்வீட்டிலேயே வாழ தீர்மானித்தது.
5
அது இரவென்றோ பகலென்றோ பாராமல் சத்தமின்றி நடந்து தனது கையில் அகப்பட்ட எலிகளுக்கெல்லாம் தொல்லை கொடுத்தது.
6
பூனையின் தொல்லைகள் அதிகரிப்பதைக்கண்ட, எலிகள் அனைத்தும் ஒரு நாள் கூடி என்ன செய்வது என்று விவாதித்தன.
7
அவைகள் எல்லாம் அன்று இரவு பகலாக அந்த பூனையை எப்படி இல்லாது ஒழிப்பது என்று விவாதித்தன.
8
குழுவில் இருந்த ஒரு எலி சொன்னது: “இரவென்றோ பகலென்றோ பார்க்காமல் பூனை எங்களை வேட்டையாடுகிறது. அதற்கு ஒரு முடிவு தேவை.”
9
அப்போது மற்றொரு எலி சொன்னது: “ஆமாம். அது சரி தான். பூனை சத்தமில்லாமல் வருவதன் காரணமாக, நமக்கு ஓடி தப்பிக்க நேரம் இல்லாமல் போகின்றது.”
10
இது கேட்டதும் மற்றொரு எலி சொன்னது: “நமக்கு பூனை வரும் சத்தம் கேட்டால் நன்றாக இருக்கும். அப்போது நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ள எமக்கு நேரம் கிடைக்கும்.”
11
ஒரு சிறிய எலி, “பூனை எப்பொழுதும் நம்மை துரத்துகிறது. குதித்து ஒரே மூச்சில் பிடிக்கிறது,” என்று அழுதது.
12
எனவே, அன்று எலிகளுடைய விவாதம் பூனை வருவதை அறிவதற்கு ஏதேனும் ஒரு வழி கண்டுபிடிப்பதிலேயே இருந்தது.
13
எல்லா எலிகளும் பல கருத்துக்களை தெரிவித்தன.
14
அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு சிறிய எலி சொன்னது: “நாங்கள் பூனையின் கழுத்திலே ஒரு மணி கட்டினால், பூனை வரும்போதெல்லாம் மணி சத்தம் கேட்கும். நாங்கள் ஓடி ஒளிந்து கொள்ளலாம்.”
15
இந்தக்கருத்தை எல்லா எலிகளும் விரும்பி ஆதரித்தன. பின்னர் அவைகளின் விவாதம் பூனைக்கு எப்படி மணி கட்டுவது என்பதே.
16
அப்போது கூட்டத்தில் இருந்த ஒரு எலி சொன்னது: “எப்பொழுதும் மதியம் வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு பூனை தூங்கும். நாங்கள் அந்த நேரம் போய் மணியை கட்டலாம்.”
17
வழமைபோல, இந்தக்கருத்தையும் எல்லா எலிகளும் விரும்பி ஆதரித்தன.
18
அப்போதுதான் அந்தக்குழுவில் இருந்த வயதான எலியொன்று எல்லா எலிகளிடமும் கேட்டது: “பூனைக்கு மணி கட்டுவது மிகவும் நல்ல விடயம். ஆனால் யார் கட்டுவது?”
19
இதைக்கேட்டதும் எல்லா எலிகளும் ஒன்றையொன்று பார்த்து கேட்டன: “பூனைக்கு மணி கட்டுவது யார்? பூனைக்கு மணி கட்டுவது யார்?”.
20
அந்தக்கேள்விக்கு விடை கிடைக்கவில்லை. எல்லா எலிகளும் முணுமுணுத்தன. அதற்கு யாரும் தயாராக இல்லை.
21
யோசனை கொடுத்த குட்டி எலியும் பூனைக்கு மணிகட்ட தயாராக இல்லை.
22
இதனால் பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற கேள்வியுடன் எல்லா எலிகளும் மெல்ல சத்தமின்றி அவ்விடத்தை விட்டு நழுவிப்போயின.
23
இன்றுவரை, ஒரு எலி பூனைக்கு மணி கட்டிவிட்டது என்று யாரும் கேள்விப்பட்டதே இல்லை.
24
எலிகளின் பிரச்சனையாக இருந்த பூனையும் நிரந்தரமாக அங்கேயே தங்கி விட்டது.
25
இந்த கதையின் அர்த்தம், பல முடிவுகள் பேசுவதற்கு இலகுவாக இருந்தாலும் செயலில் இலகுவானதல்ல.
26

85 reads • Mar 2025 • 341 words • 26 rows


Write a Comment